Quantcast
Channel: மாதவிப் பந்தல்
Viewing all articles
Browse latest Browse all 53

’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்து-க்களா?வாழ்த்து-களா??

$
0
0
மு.கு: 
இணையத்தில் அரையும்-கொறையுமாச் செய்த "மிகைத் திருத்தம்"; வாழ்த்து-க்கள் தவறா?

தொல்காப்பியர் லூசா? (அ) சில பதிவர்கள்/ கீச்சர்கள் லூசா?:)
* சரியான ஒன்றைத் தவறென்று ஆக்கி...
* தமிழ் உணர்வாளர்களை இதற்காக "டுமீல்/ டுமீலன்" ன்னு இளக்காரம் பேசி...
* ஓ இது தவறோ?-ன்னு நம்மையே திகைக்க வைத்து...


கவுண்டர் பாணியில்: "டேய்....ஒங்க சிகைத் திருத்தம் பண்ணுங்க! ஏன்டா மிகைத் திருத்தம் பண்றீங்க"?:)

ட்விட்டரில் இப்ப = Twitlonger/ பஞ்சாயத்து சீசன்!:) 
சீசன் சிறப்பு நிகழ்ச்சியாக, ஒரு கதை போல் பார்க்கும் முயற்சி! ஆர-அமரப் படிங்க!:)


* வாழ்த்து-க்களா? வாழ்த்து-களா??
* எழுத்து-க்களா? எழுத்து-களா??
= இந்தப் பஞ்சாயத்துக்கு....பாண்டியன் பறை அறிவிச்சி, தருமி வந்து, எந்த நக்கீரனின் தாடியைத் தடவப் போறானோ?:)

90 நாள் அஞ்ஞாதவாசம்!
இப்போதைக்கு என் நெலமை = கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு:)

தமிழின் பால் மாறா ஆர்வமுள்ள நண்பன் பலராமன் (@balaramanl)...எப்படியோ #365paa வில் என் அஞ்ஞாதவாசத்தை மோப்பம் பிடிச்சிட்டான்!:)
அவன் கேட்டுக் கொண்டதால், என் பல்வேறு யோசனைக்கு நடுவே.....Figure இல்லா ஆப்பிரிக்க விமானத்தில் இப் பதிவு:)


பொதுவா, இணையத்தில் எது ஒன்னும் பரவும்! அதுவும் ட்விட்டர் வேகம், சுனாமி வேகம்!

* ஷைலு பிரிட்ஜூ நாத்தம் அடிக்குது என்ற சமுதாயச் சேதி ஆகட்டும்....
* சில்க் ஸ்மிதாவின் ஆவி, வித்யா பாலனை மன்னிக்குமா? என்ற அறிவியல் ஆகட்டும்....
* அன்னக் கிளியா? சின்னச் சின்ன ஆசையா? போன்ற Debate ஆகட்டும்....
140-இல் நடக்குறாப்பல, வேறெங்கும் நடத்த முடியாது!:)

தமிழும்......இதுக்கு விதிவிலக்கு அல்ல!
எழுத்துப் பிழைகளை... ஒரு பள்ளிக் கட்டுரையில் கண்டுபுடிக்கறதை விட, 140இல் கண்டுபுடிப்பது எளிது!
= பளிச்-ன்னு பல் இளிப்பாள்:))
அவளை "Correct" செய்ய சில ட்வீட்டர்களும் ரொம்ப ஆர்வமா முனைவார்கள்!:)

ஆனா.....ஆனா......

ஒட்டடை அடிக்கிறேன் பேர்வழி ன்னு,
ஒட்டடையோடு சேர்த்து...
வீட்டின் உயர்ந்த பொருட்களையும் உடைத்து விடுகிறார்கள்!
அப்படி ஆனதே....வாழ்த்து-க்கள் "தவறு" என்ற பரவல்!

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியானதையும், தவறு-ன்னு அடிச்சித் "திருத்துவது"

பிரபலமானவர்கள் சொல்வதால், இது பரவியும் விடுகிறது!
இழப்பு = தமிழ் மொழியிலுக்கு :(

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு! = இனி, எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், தரவு (ஆதாரம்) கேளுங்க:)
பலரும் "அபிப்ராயம்" சொல்லுறாங்களே தவிர, தரவு காட்டுவதில்லை!

மொழி இயல் = ஒருவரின் நம்பிக்கையோ/ புராணக் கதையோ அல்ல, அப்படியே ஏத்துக்கிட்டு போவதற்கு!
என் ஆளுங்க நான் சொல்லுறதை ஏத்துக்கட்டும், உன் நண்பர்கள் நீ சொல்வதை ஏத்துக்கட்டும்-ன்னு தனிமனித ’ஜ’ல்லி அடிக்க முடியாது:)

அறிவியலைப் போலவே = மொழியியல்!
அதனால்.....சத்யராஜ் style இல்....தரவு தரவு!:))

வாழ்த்து-க்கள் vs வாழ்த்து-கள்; Jollyஆ, கதை போலப் பார்க்கலாமா?

திருக்குறளில் "கடவுள் வாழ்த்து" ன்னு இருக்கும்! -"கள்/ க்கள்" இருக்காது! => கள்-ளுண்ணாமை! :))
= வாழ்த்து - ஒருமை!
= -கள் (அ) -க்கள் ன்னு விகுதி சேர்த்தால் வருவது = பன்மை!

சொன்னா நம்ப மாட்டீங்க! சங்க காலத்தில் இது = அஃறிணைக்கு மட்டும் தான் பயன்படுத்துறது வழக்கம்
இன்னிக்கி...எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் ன்னு...சகலருக்கும் பயன்படுத்தறோம்:)))

ஒருமையை -> பன்மை ஆக்க, தொல்காப்பியர் ஒரு formula சொல்றாரு! = "விகுதி சேர்க்கவும்"
* ஆட-வன் = ஆட-வர்
* பெண் = பெண்-டிர்
* சான்-றோன் = சான்-றோர்

அர், இர், ஓர் = எல்லாமே பன்மை விகுதி! ஆனா கவனிச்சிப் பாருங்க! எல்லாமே உயர் திணை தான்!
* யானை = யானை-யோர் ன்னு சொல்லுறதில்ல!:)
* யானை = யானை-கள்!

=> So... அஃறிணைப் பன்மை விகுதி = கள்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
கொள்வழி உடைய பல அறி சொற்கே (தொல் - சொல்லதிகாரம்)

கள்ளொடு சிவணும் = சிவன் கள்ளு குடிச்சாரு ன்னு, டைப் டைப்பா, அர்த்தம் பண்ணப்படாது:) பாவம் சிவபெருமான்! கருணையே உருவானவரு! விடம் தான் குடிச்சாரு! கள் அல்ல!
சிவ"ன்" = கண்ணு வேணும் ன்னா மூனா இருக்கலாம், ஆனா சுழி ரெண்டு தான்:)

இங்கே "சிவணும்" ன்னா சேரும்-ன்னு பொருள்!
கள்ளொடு சிவணும் = -"கள்" என்ற விகுதியோடு சேரும்!

இன்னொரு techniqueஉம் சொல்லிக் குடுக்குறாரு, தொல்சு!:)
கலந்தன கண்ணே! கழன்றன வளையே
கலந்தது ன்னு சொல்லாம, கலந்தன = பன்மை! இப்படி, வினை முற்றை வைத்தும், ஒருமையா, பன்மையா ன்னு தெரிஞ்சிக்கலாம்!

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே (தொல் - சொல்லதிகாரம்)

ஆனா, ஒரு பெரிய பிரச்சனை வந்துருச்சி!
= படிச்ச மனுசன், ரொம்ப மரியாதை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டான்!:)

சில ஆதீனங்கள்..."யாம் அறிவோம்!" ன்னு சொல்றாங்களே... அது போல வச்சிக்குங்களேன்:)
அதென்னடா....யாம் அறிவோம்? "நான் அறிவேன்"-ன்னா என்னவாம்?
ஒருமை = ஒரு மாதிரியா இருக்காம்! பன்மை தான் = மரியாதையா இருக்காம்:)

* புலவன் = மரியாதைக் குறைச்சல்!
* புலவர் = மரியாதையா இருக்கு!:)

ஆனா, அர் = பன்மை விகுதி ஆச்சே? ஆட-வன் = ஆட-வர்;
இப்போ, பன்மையைக் கொண்டு போய், மரியாதைக்கு வச்சிட்டோம்-ன்னா.... பன்மைக்கு என்னா பண்ணுறதாம்?
விகுதியோடு-விகுதி சேர் => அரசு + (அர் + கள்)

-கள் விகுதியை, அஃறிணைக்கு மட்டும் வைக்காம, மரியாதைப் பன்மைக்கும் வைக்கலாம் ன்னு, மாற்று ஏற்பாட்டைச் செஞ்சாரு!
* மன்னன் - மன்னர் = ஒருமை
* மன்னர் - மன்னர்கள் = பன்மை

அரசு-அர்-கள் = This is like double plural! :))
In English, King - Kings!
King, Kinger, Kings கிடையாது:) மருவாதை தெரியாத பயலுவ!:)

திராவிட மொழிகளில் தான் "மரியாதைப் பன்மை" ன்னு நினைக்கிறேன்!
தெலுங்கில்:
* ஒருமை: கிருஷ்ண தேவ ராஜு, கிருஷ்ண தேவ ராஜூலு!
* பன்மை: ஆந்திர தேச ராஜுலு

நாய் = குக்க; நாய்கள் = குக்கலு!
Hence, ட்வீட்டர் = ட்வீட்டர்லு :)) மரியாதை குடுக்குறா மாதிரிக் குடுத்து, அஃறிணை ஆக்கீறலாம் போல இருக்கே:)


Matter க்கு வருவோம்! -"கள்" எப்படி -"க்கள்" ஆச்சு???

தொல்காப்பியத்துல சொன்னதே தான்!.. "கள்/ க்கள்" = ஒற்று இரண்டாகும்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
அளபிற் குற்றுயிர் இரண்டு ஒற்றாகும்

இப்படி இரண்டு ஒற்று... க்கள் ன்னு மிகுவதை, பல இடங்களில் காணலாம்!
* ஆ = ஆ-க்கள்
* மா = மா-க்கள்
ஊர்க் குறு மா-க்கள் வெண் கோடு கழாஅலின் (புறநானூறு)

இலக்கண ஆசிரியர்கள், இதைச் சரளமாகப் பயன்படுத்துவர்;
Ex: "ல, ள -க்கள் திரிந்த ன ண -க்களுக்கு முன்னின்ற மகரம் குறுகும்"

அதே கதை தான்!
= முதலில் அஃறிணை மட்டுமே...
= ஆனா, மரியாதைப் பன்மைத் தாக்கத்தால், ரெண்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
= பூ= பூக்கள் & குரு = குருக்கள்

ஓக்கேடா இரவி...புரிஞ்சிருச்சி! -கள், -க்கள் = ரெண்டுமே பலவின்பால் விகுதி தான்!
ஆனா.. என் கேள்வி என்ன-ன்னா: எதை, எங்கே பயன்படுத்தறது? அதைச் சொல்லலீயே? குரு=குருக்கள் போல, வீடு=வீடுக்கள் ன்னு எழுதலாமா?:))

இங்க தான் "டண்-டணக்கா" இருக்கு!:)

குரு = குருக்கள்! ஆனா...வீடு = வீடுக்கள் அல்ல!
Fan = Fans! ஆனா Man = Mans ன்னு கேட்போமா?:) Man = Men!

பலா + பழம் = பலாப் பழம்
மா + பழம் = மாப் பழம் ன்னு சொல்லலாமே? ஏன் மாம்பழம்?:)
இதுக்குப் பேரு தான் = மரபியல்! (சொல்லதிகார - விளி மரபு)

புழுக்கள், பசுக்கள், குருக்கள், உடுக்கள், எழுத்துக்கள்...
புழுகள், பசுகள், குருகள்-ன்னு சொல்லிப் பாருங்க! எப்படி இருக்கு? :)

= புழுகள் சரியா? புழுக்கள் சரியா??
= புழு-க்-கள் = புழுவின் கள் = Chinese Soup-ன்னு... சில குசும்பு புடிச்ச நாத்தனார்கள் அர்த்தம் பண்ணிக்கலாம்:)
= எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து ன்னு, double double meaningல்ல கெக்கலிப்பாய்ங்க!!

ஆனா...."எழுத்து-க்கள்" ன்னு எழுதற "முட்டாப் பசங்க" யாரு யாரு?
= தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்
= இளம்பூரணர்
= மணக்குடவர்
= ஈழத்தின் சைவத் தமிழறிஞர், ஆறுமுக நாவலர்
= All of the Above 'முட்டாள்-ஸ்":((

நானா அடிச்சி விடல... இங்கிட்டு போய் முழு உரையும் படிச்சிக்கோங்க! கீழே படமும் குடுத்திருக்கேன்
= http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=1&pno=1

உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர்ன்னு சொல்லுவாய்ங்க! அவரின் தமிழ் அறிவு, எந்த Tweeter க்கும் இளைச்சது கிடையாது!

நீங்களே மொத்த உரையும் வாசிச்சிப் பாருங்க...
எத்தனை முறை..."எழுத்து-க்கள், "எழுத்து-க்கள்" ன்னு... பயன்படுத்தறாரு-ன்னு தெரிஞ்சிப்பிங்க!

பாத்தீங்கல்ல? ஆனானப்பட்ட தொல்காப்பிய ஆசிரியர் இலக்கணப் பிழை பண்ணிட்டாரா??? :))
“மொழி மரபியலை” நம் Ego வுக்கு அணுகாமல்....தமிழைத் தமிழாக அணுகிப் பார்த்தா, அப்போ தானுங்க இது புலப்படும்!



சரிப்பா... சாதாரண ஒரு சொல்லு; இதுல ஏன் இம்புட்டு உறுதி காட்டுறேன்?

= ஏன்னா, இதை வச்சியே, #TNFisherman இல், தமிழ் உணர்வாளர்களை, "டுமீல், டுமீலன்ஸ்" ன்னு இளக்காரம் பேசியதால்..
= அந்தப் "பண்டிதாள்", இப்போ எங்கே போய் மூஞ்சியை வச்சிப்பாங்க? நச்சினார்க்கினியருக்கு எதிர்ப்பேச்சு பேசுங்களேன் பார்ப்போம்!

நான் புடிச்ச முசலுக்கு ஆறே கால், என் முருகனுக்கு ஆறே தலை என்பதற்காக அல்ல!:)
மொழிவளம் = அதுக்காகத் தான்!
தமிழ் மொழி, எக்காரணம் கொண்டும், தன்னிடம் உள்ள நல்ல சொற்களை இழந்து விடக் கூடாது!!

இது தொல்காப்பியர் தொட்டு வந்த மரபியல்!
.... அதை over night இல் tweet போட்டு, வீசி எறிந்து விட முடியாது! = இதுவே மொழியியலார் ஆதங்கம்!

மத்தபடி, கற்றது கை மண்ணளவு! = திருத்திக் கொள்ள வெட்கப்படவே மாட்டேன்;
தமிழ்க் கடலைப், பூனை போல் நக்கி நக்கிக், காலியாக்கப் பாக்குறேன்-ன்னு கம்பனே சொல்லுறான்!

அப்படித் தான் அன்னிக்கு, @naanraman என்பவர் செய்வினை/ செயப்பாட்டு வினை ன்னு கேட்ட கேள்விக்கு, நானும் @nchokkan சாரும் ஆடிப்போனோம்:)
அவர் யாரு-ன்னே தெரியாது! ஆயினும் அவர் சுட்டிக் காட்டியதை, உடனே திருத்தி, மன்னிப்பும் கேட்டு, தன்வினை - பிறவினை ன்னு மாற்றி இட்டேன்!
------------

இன்னோன்னும் சொல்லணும்!
மொதல்ல, எழுத்து-க்கள் இலக்கணப்படியே தவறு ன்னு பேசிக்கிட்டு இருந்தவங்க.....
இப்போ Tune ஐ மாத்தி....., "அனர்த்தம்" வந்துறப்படாதே ன்னு கவலைப் படுறாங்களாம்:)

எழுத்து-க்-கள் = "போதை" தரும் எழுத்து!
அப்போ Fruits = பழங்-கள்?
= ரொம்ப நாள் புளிச்சுப் போன கள்ளா?:)
இனி பழங்கள் ன்னு யாரும் எழுதாதேள்; "பழம்ஸ்" ன்னு எழுதுங்கோ! ஆசீர்வாதம்!:)

* வாழ்த்து + க் + கள் = 'குவார்ட்டரோடு' கூடிய வாழ்த்து-ன்னா...
* அப்போ, வாழ்த் + துகள்? = வாழ்க்கையே தூள் தூளாப் போவட்டும்??
= இப்படி நாக்கால தமிழ்ச் சொற்களை வெட்டி வெட்டிக் கெக்கலிப்பது = மட்டமான மனப்பான்மை!:(

"காய் தொங்குது" = பலான அர்த்தமெல்லாம் சொல்ல முடியும்:)
அதுக்காக, "காய்" என்பதை மொழியில் இருந்தே துரத்திடுவோமா?

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சங்கேத மொழி இருக்கும்!
* கல்லூரி மாணவர்கள் ’பாஷை’
* டீக்கடை”பாஷை’
* அவாள் ’பாஷை’
* சென்னைத் தமிழ் ன்னு நிறைய...

கல்லூரிப் பசங்க - "காய்" ன்னா... நமுட்டுச் சிரிப்பு, சிரிக்கத் தான் செய்வாங்க:)
எடக்கு பண்ணுறாங்கன்னு, மொழியை விட்டே துரத்தீற முடியாது!
------------

சிறு, நீர்த் துளி உன் மேல் பட்டது
= இந்தக் காலத்தில் இப்படிச் சேர்த்துச் சொன்னா, எல்லாருக்குமே நெருடும்:)) ஏன்னா சிறு-நீர் universalஆக ஒன்றைக் குறிக்கத் துவங்கி விட்டது!

=ஆனா,காய் என்பதோ, எழுத்துக்கள் என்பதோ, universalஆக ஒன்றைக் குறிக்கவில்லை!  
காய் / எழுத்துக்கள், இன்னிக்கும் பொதுப் புழக்கத்தில் இருக்கு!

இப்படிப் பரவலாக இருக்கும் ஒன்றை, "எழுத்து-க்-கள்".. நாக்கால வெட்டி வெட்டி, அச்சொல்லே காணாமப் போவ..நாமே வழி செய்யலாமா?:((
------------

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியாக இருக்கும் ஒன்றை... தவறு ன்னு "திருத்துவது":)

யாதும் ஊரே, யாவரும் கே"ளீ"ர் ன்னு எழுதினா.... அப்போ....கே"ளி"ர் = உறவினர் ன்னு திருத்துங்க! ஆனா, வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள் என்பதை அல்ல!

* தொல்காப்பியர் - நச்சினார்க்கினியர் பலுக்கல்,
* ஈழத்து அறிஞர் பலுக்கல்
* இன்றைய இராம.கி ஐயா வரை பயன்படுத்துவது...
* அதை "மிகைத் திருத்தம்" பண்ணித் துரத்திடாதீங்க....

= இதுவே தமிழுக்காக, உங்களிடம் என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!



Okay... எழுத்து-க்கள் சரியே = தொல்காப்பிய ஆசிரியர்கள் மூலம் பார்த்து விட்டோம்!
ஆனா, எங்கே -கள் போடுறது? எங்கே -க்கள் போடுறது? = சுருக்கமாப் படம் போட்டுச் சொல்லட்டுமா?

விரிவா நூலகத்தில் பாத்துக்கிடலாம்! Here = http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=84

இன்னோன்னும் சொல்லிடறேன்:
வாழ்த்து-க்கள் கட்சிக்காரவுங்க, -"க்கள்" என்பதற்கு, குற்றியலுகர விதியை ஆதாரமாக் காட்டுவாங்க! ஆனா அதுவும் தவறே:)
நாம தான் எந்தக் கட்சியிலும் நின்னு பேசுற சுபாவம் இல்லீயே!:) தமிழைத் தமிழாக அணுகவே பிடிக்கும்!

குற்றியலுகரப் புணர்ச்சி:
பிடித்து + கொள் = பிடித்துக் கொள்! =>ஒற்று மிகும்!
இதே போல வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள்ன்னு எடுத்துக்கக் கூடாது!

ஏன்னா இவ்விதி, ரெண்டு "சொற்களுக்கு" இடையே தான்!
* "-கள்" = சொல்லு அல்ல! அதுக்குத் தனியாப் பொருளும் இல்ல!
* "-கள்" = விகுதி! அது வரு"மொழி" அன்று!
So, முன்பே சொன்ன விகுதியின் விதியைத் தான் எடுத்துக்கணும்! குற்றியலுகர விதியை அல்ல!

Ok, Now....Let us come to the "Egg-jamples" :))

1) "க்" மிகலாம்...

வல்-ஒற்றோடு வருங்கால், மூவெழுத்து, அதற்கும் அதிகமான  "உ"கரச் சொற்கள்...
* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள்
=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள்

* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
=> கொலுசுகள், மிராசுகள்

வாழ்த்து -ல, த் வல்லின ஒற்று => மிகலாம் = வாழ்த்துக்கள்!
கொலுசு -ல, ஒற்றே இல்ல => So, கொலுசு-க்கள் ன்னு மிகாது! = கொலுசுகள்!

2) "க்" மிகணும்

* ஈரெழுத்துச் சொற்கள்...குறிலா வந்தா = மிகணும்!
=> பசுக்கள், அணுக்கள், தெருக்கள்

* ஈரெழுத்துச் சொற்கள்..நெடிலா வந்தா = மிகாது!
=> வீடுகள், மாடுகள், ஓடுகள்

* ஓரெழுத்துச் சொற்கள் = மிகணும்! (ஐ-ஒளகாரக் குறுக்கம் அற்றவை)
=> பூக்கள், மாக்கள், ஈக்கள்

3) "க்" மிகவே கூடாது

ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ...."வு" வரும் போது மட்டும், மிகவே கூடாது!
=> ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்
------------

அவ்ளோ தானுங்க! இதுக்கா Twitter-இல் வாய்க்கா வரப்புத் தகராறு?:) muruga! me the appeatu:)
Lemme put this as a ready reckoner for the benefit of all...(save this img) 


வாழ்த்து-க்கள் ன்னு முன்னாடி எழுதிக்கிட்டு இருந்தவங்க....
என்னமோ ஏதோ ன்னு பயந்து போயி, 
நடுவால மதம் மாத்திக்கிட்டவங்க....
பழையபடி, வாழ்த்து-க்கள் ன்னே எழுதலாம்! எழுதுங்க!

பாவ மன்னிப்பு கேக்க வேணாம்!:) ஏன்னா, நீங்க எந்தத் தப்பும் செய்யலை!:)




முடிப்பாக... ட்விட்டர் மக்களுக்குச் சிறிய வேண்டுகோள்:

1) Tamizh has a Written Constitution! That too with a version history of 2000 years!
= Never “banish” rightful words from “heritage”!
------------------------------------------------

2) அப்போ தவறான சொற்களை எப்படித் தான்யா அடையாளம் காண்பது?

= யார் தவறு-ன்னு சொல்றாரோ...
= நானே சொன்னாலும், சொக்கன் சொன்னாலும், வேறெவர் சொன்னாலும்.....தரவு கேளுங்கள்= தரவு தரவு :))

You yourself can search = வாழ்த்துக்கள் site:tamilvu.org/library
A simple google on library, inside original texts (thol-kaapiam or nan-nool), will show an usage pattern! No need to read big big poems for this:)
------------------------------------------------

3) தொல்காப்பியரை அவ்ளோ லேசுல எடை போட்டுறாதீக
தமிழ் சார்ந்த ஐயம் எதுவாயினும், நீங்களா முடிவு கட்டி.... ட்வீட்டைப் போட்டுறாதீக:) தொல்காப்பியம் = தட்டுங்கள்! திறக்கப்படும்:))

ஐயா -> அய்யா
= தந்தை பெரியார் தான் ஐ->அய் ன்னு தேவையில்லாம மாத்தினாரு-ன்னு சில தமிழ்ப் "பண்டிதாள்" பெரியாரைக் கேலி பேசினாங்க-பேசுவாய்ங்க!
= தமிழ்ப் போர்வையில் இருக்கும் சம்ஸ்கிருத-பாசமிகு பண்டிதாள்!

ஆனா, பெரியாரைத் திட்டும் இவர்கள், தொல்காப்பியர் மேலே கை வைக்க முடியுமோ?:)
2000 ஆண்டுக்கு முன்பே, தொல்சு, எழுத்துச் சீர்திருத்தம் குறிச்சி வச்சிட்டுத் தான் போய் இருக்காரு - வியப்பா இல்ல?
"அ"-கரத்து இம்பர் ,"ய"-கரப் புள்ளியும்
"ஐ" என நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும் (தொல்-எழுத்ததிகாரம்)

பெரியாருக்கும் முன்னமே,இப்பிடிச் சிந்திச்சவரு தான் இந்தாளு = தொல்காப்பியர்!:)
ஆதித் தமிழ்த் தந்தை = அவரை விட, உங்க அரைகுறை tweet பெருசில்ல-ன்னு உணரவும்!


4) இணையத்தில் "பிக்காலி" ன்னு திட்டுறவன் கூட ஓக்கே, ராசி ஆயீருவாங்க!:) ஆனா எதிர்ப்பாய் ஒன்னுமே பேசாம... தரவோட மட்டும் பேசிட்டா அம்புட்டு தான்= ஆதாரமாடா குடுக்குற? நீயே என் எதிரி!:)

= கருத்து வேற, மனிதம் வேற!

என் நண்பர்கள்-ன்னா.....
= என் கருத்துக்கு உடன்பட்டே இருக்கணும்;
= என் உணர்ச்சிகளையே பிரதிபலிக்கணும் ன்னு மனசைக் கல்லு ஆக்கிக்க வேணாமே! Plz..
------------------------------------------------

5) கருத்து எதிரா இருந்தாலும், மனம் என்றுமே ஒன்றான குணம்!
= தாமே பெற வேலவன் தந்தது!

"டேய் முருகா"-ன்னு டேய் தான் போடுறேன்…கோச்சிக்கவே மாட்டான்:)

உடனே, "டேய் பெருமாள்"-ன்னு சொல்லேன் பார்ப்போம் -ன்னு, சமயக் கணக்கா வம்பிழுத்தா?..
சொல்ல மாட்டேன்! ஏன்னா = அப்பா!:)
காதலன்/ காதலி/ ஆருயிரைத் தான் டேய் போட முடியும்:) டேய் முருகா!:)
------------------------------------------------

6) Finally.....
#TNFisherman, #EelamTamils, #MullaiPeriyar போன்ற ட்விட்டர் முயற்சிகளில், எழுத்துப் பிழை வரலாம்! அது ஒன்னும் "பஞ்சமா பாதகம்" இல்லை!
= இரங்கல் வீட்டிலே சந்திப் பிழை காண்போமா? :(

ஆனா....
மொதல்ல தமிழை ஒழுங்கா எழுதுங்கடா டூமீல் - டுமீலன்ஸ்; அப்பறம் #TNFisherman கோஷம் போடப் போவலாம்- போன்ற "மட்டமான இளக்காரங்கள்" வேண்டாமே!

இதுல @nchokkan அணுகுமுறை பிடிக்கும்! மாற்றுக் கருத்தே இருப்பினும், பிழைகளுக்காக, இளக்காரம் செய்யாத குணம்!
(Note: நான் எழுதுன இந்தப் பதிவுலயே கிரந்தம் அங்கும் இங்கும் இருக்கும்:) ஆனாலும் முடிஞ்ச வரை தவிர் = முயற்சியே முக்கியம்:)

"எழுத்துப் பிழைக்காக, தமிழ் சார்ந்த முயற்சிகளை இளக்காரம் செய்யேன்" ன்னு உறுதி கொள்வோம்!
------------------------------------------------

@iamkarki கிட்ட, கடன் பாக்கி இருக்கு; எலே...எத்தியோப்பா-வுல ஆப்பிரிக்க குழந்தைங்க முகாமில், விஜய் பாட்டா பாடுதுங்க = என் உச்சி மண்டைல சுர்ருங்குது = I had the shock of my life: )

அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்! வர்ட்டா?:)


Viewing all articles
Browse latest Browse all 53

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!