Quantcast
Channel: மாதவிப் பந்தல்
Viewing all articles
Browse latest Browse all 53

எவனோ "வாலியாம்"! மட்ட ரகமா எழுதறான்:)

$
0
0
வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!

அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!

அதென்ன "வாழ்ந்தவர்"? ...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு!

அவர் பொன்னுடலுக்கு மட்டும்..நம் கரம் கூப்பிய அஞ்சலி! என் கண்மலர் வணக்கம்!
Hey Raam - Vaali


முன்பொரு முறை... ஒரே மாசத்துல... பாடகி சொர்ணலதா மறைந்தார்; இசையமைப்பாளர் சந்திரபோஸ் மறைந்தார்!

அது சமயம், அஞ்சலிப் பதிவு கூட என்னால எழுத முடியல!

அது போன்ற துன்பமே இப்போதும்!
அடுத்தடுத்து... மணிவண்ணன், TMS, வாலி -ன்னு...


iLayaraja - iLaya vaali

வாலியிடம் எனக்குச், சிற்சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டென்றாலும், மாறுபட்ட தமிழ் என்பது கிடையவே கிடையாது!

அவரின் அரசியல் சார்ந்த "துதி நடை" தவிர்த்து..
அவரின் கவிதை ஒவ்வொன்றிலும் தனித்துத் தெறிக்கும் = "சொற்செட்டு"!

பற்செட்டுக் கிழவனும், பக்கோடா தின்ன வல்ல நற்செட்டு!
விற்செட்டாம் தமிழ் வில்லில்...
வீறிட்டுக் கிளம்பும் சொற்செட்டு! = அதுவே வாலி!

** கண்ணதாசன் பாட்டில் = "கருத்தழகு" = தானாக வந்து விழும்
** வாலியின் பாட்டில் = "சொற்செட்டு" = தானாக வந்து விழும்

இரண்டுமே, மனத்தைக் குத்தி நிக்கும்!


எவனோ "வாலியாம்"!  -  பதிவின் தலைப்புக்கான கதை:

அப்போ தான், வாலி புகழ் பெற ஆரம்பிச்சிருக்கும் வேளை...
ஆனா, சென்னையில், இந்த "மூஞ்சி" தான் வாலி-ன்னு, பல பேருக்கு அப்போ தெரியாது!

உறவினர் ஒருவரின் வற்புறத்தலால், புதுசா அடைஞ்ச புகழை வச்சி...
சி.எஸ்.ஜெயராமன் என்ற பிரபல பாடகரை அணுகி... (வீணைக் கொடி உடைய வேந்தனே fame)...
திருச்சியில் ஒரு கச்சேரிக்கு, அழைத்து வருமாறு ஏற்பாடு! வாலி, அவரைக் காரில் அழைச்சிக்கிட்டு வராரு..


பயணத்தில், சி.எஸ்.ஜெயராமன் பல பாடல்கள் பாட... வாலி, அதன் இராகங்களை எல்லாம் கண்டுபுடிக்க... ஒரே கும்மாளம் தான்!

வாலியின் இசை அறிவை வியந்த ஜெயராமன்..
"ஒங்களுக்கு என்ன தம்பி வேலை?" -ன்னு கேட்டு வைக்க...
-எமக்குத் தொழில் கவிதை-
"பாட்டெழுதும் வேலை" -ன்னு வாலியும் சொல்லி வைக்க...

(சினிமா அல்லாத Album Songs எழுதறவங்க பேரு = பரவலாகத் தெரிவதில்லை!
"உள்ளம் உருகுதய்யா" பாடலை எழுதியது ஒரு பெண்மணி = ஆண்டவன் பிச்சை -ன்னு பேரு; நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?)

"கற்பனை என்றாலும்", "ஓராறு முகமும்" போன்ற முருகன் Album Songs எழுதியது இவரு தான் -ன்னு அறிந்து கொண்டார் ஜெயராமன்..

"தம்பீ, ஒங்களுக்கு நல்ல தமிழில், நல்லாப் பாட்டெழுத வருதே! நீங்க சினிமாவுக்கு வரலாமே?
ஒன்னுமே தெரியாதவனெல்லாம், கண்ட தமிழில்... "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" -ன்னு அரசியல் கலந்து எழுதித் தள்ளுறானுங்க!

எவனோ வாலியாம்! மட்ட ரகமா எழுதறான்! 
புது ஆளு -ன்னு இந்த MSV, போயும் போயும் அவனைச் சேத்துக்கிட்டு இருக்காரு!..."

இதைக் கேட்ட வாலிக்கு, செம Shock! :)
ஆனா ஜெயராமனுக்கோ, அவரு தான் வாலி -ன்னே தெரியாது!:)

பயணத்தில், இது பத்தி மூச்சே விடாம, வாலி தொடர...
ஊரு வந்து இறங்கிய போது, அனைவரும் "வாலி வாலி" எனக் கொண்டாட...
சி.எஸ்.ஜெயராமன் + வாலி
= ரெண்டு பேரு மூஞ்சியும் பாக்கணுமே!:)))

குபுக் -ன்னு சிரிச்சிட்டாங்க, ரெண்டு பேரும்!
ஜெயராமன், வாலியின் கையைப் பற்றிக் கொண்டு.. "முன்னாடியே சொல்லி இருக்கலாம்-ல்ல தம்பீ? 
காவிரித் தண்ணிக்கு எப்பமே குசும்பு ஜாஸ்தி" -ன்னு இடிச்சாராம்:)

= இதான் வாலி! 
"ஒரு கருத்து சொல்லிட்டானே" -ன்னு மனசுள் கறுவாத குணம்! = Legends are Legends!


All Young - MSV, Vaali, P Susheela, TMS!
Vaali has that "inquisitive" face, always!:)

வாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்";
அதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;

* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...
* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...

(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே: 
சில திருப்புகழ்ப் பாடல்களை விட.. வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்.. ஏனோ என் உள்ளத்தை.. உருக்கி எடுக்கும்!)

அதுவே இன்று...
முருகன் (சினிமா) பாட்டு வலைப்பூவில் = வாலி அஞ்சலி!
கண்ணன் (சினிமா) பாட்டு வலைப்பூவிலும் = வாலி வணக்கம்!



பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும், கிளியும் கூட, மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

வரி: வாலி
படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி



எல்லாருக்கும் தெரிந்த தகவல் = குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று!
ஆனால், இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி = குழந்தைக் குரல் பாட்டுக்கென்றே சொந்தமானவர்!

ஆனா, இந்தப் பாட்டை வாலியா எழுதினார்?
- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...
- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..
- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;

என் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,
அறைந்த என் கையும், அவன் கையும் கோத்துக்கிட்டு.. அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்!
= வாலி (வலி) வரி!

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
-----

ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

கருணையே இல்லையாடா முருகா? =  (சேவல்) "கொடியவா"!
இன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..

* வாலிக்கு = அரங்கன் மேல் இனம் புரியாத காதல்! முருகனை = அம்மாவும் நீயே, அப்பாவும்  நீயே என்றார்!
* எனக்கோ = முருகன் மேல் "இனம் புரிந்த" காதல்! அரங்கனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்பேன்!

இப்படி... என்....
மன வரியின் முகவரி = வாலி வரி;
வாலி வாழ்க!

Viewing all articles
Browse latest Browse all 53

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!