Quantcast
Channel: மாதவிப் பந்தல்
Viewing all articles
Browse latest Browse all 53

வ.உ.சி -யை நொறுக்கிய "தமிழ்ப் பண்டிதர்கள்"!

$
0
0
இன்று Sep 5; (ஹிந்து ஞான மரபின் வித்தகர்: Dr. ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான) ஆசிரியர் தினம்..
ஆனால்... அது  மட்டுமே அல்ல!

கல்வியும்/ செல்வமும் ஒருங்கே இருந்தும், உடம்பால் பாடு எடுத்த தியாகச் செம்மல்..
தமிழறிஞர் = "வ.உ.சி"
அவர்களின் பிறந்த நாளும் கூட (Sep 5)!

என்னாது... வ.உ.சி = தமிழறிஞரா??? ஆமாய்யா ஆமாம்!

தூத்துக்குடி தந்த தூயோன்
* வ.உ.சி = ஒரு தேச பக்தன் -ன்னு மட்டுமே பலருக்கும் தெரியும்!
* ஆனா, வ.உ.சி = ஒரு தமிழ் அறிஞன் -ன்னு தெரியுமா?

Only very few ppl. know; Why?
Thatz the sad story of tamil media world:(

இன்று, பார்க்கப் போவது, ஒரு தமிழ்ப் "பஞ்சாயத்து":)
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி  
vs  தமிழ்ப் பண்டிதர் திரு. அனந்தராம ஐய்யர்




"ஐய்யர்" -ன்னு எழுதிட்டதாலேயே, Twitter பெரிய மனுஷாள், என்னை நோக்கிப் படையெடுக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்:)
ஏற்கனவே 10 மாதங்கள் ஒதுங்கி இருந்து, இப்ப தான் மீண்டு வந்துள்ளேன்...

Group சேர்ந்து கொண்டு ஒதுக்கி வைத்தல்:
= இன்றைய Twitter மட்டுமல்ல!
= அன்றே... வ.உ.சி யும் பட்டிருக்காரு, இலக்கணத் தமிழ் வாத்திகளின் கையில்!

கருத்து வேற, மனிதம் வேற!
* நான் சொல்வது = கருத்து மட்டுமே!
* தனி மனிதத் தாக்குதல் = ஒரு போதும் நான் அறியாதவன்!

"KRS-ஐ ஒழிச்சிக் கட்டுங்கோ; பூச்சி மருந்து அடிச்சி ஒழிங்க"
- போன்ற "இட்லிவடை வாசகங்கள்" என் வாயில் வரவே வராது:(

பூச்சி மருந்து அடிச்சி, "என் சாவு"
= Twitter பெரிய மனிதர்களான ஒங்க கையில் இல்லை!:(

அது இன்னொருவன் கையில்!!
எனவே, இதில் உள்ள "தர்ம-நியாயங்களைத்" திருமுருகன் தாளில் வைத்து விடுகிறேன்;

உண்மை, உறுத்து வந்து ஊட்டும்!
அதுவும் தரவோடு வந்தா? = தாங்க முடியாது தான்:)))
* சொல்வது என்ன-ன்னா:  தமிழுக்கு நேர்ந்த கொடுமைகள்!
* என் ஏக்கம் = தமிழ் ஏக்கம்:  அது.. ஐய்யர் என்றல்ல! யார் செய்தாலும் வரும்.. கலைஞர் உட்பட!

தமிழை = "டுமீல்" என்று எள்ளி விட்டு,
அதே தமிழில் இலக்கணப் பாடம் எடுக்கும் Twitter "வாத்திகள்" யாராயினும் = எனக்கு இதே ஏக்கம் தான்!

இவர்களுக்கு, தமிழ் = "உணர்வுப் பூர்வமானது" அல்ல! வெறும் Rulebook; ஆடு-களம், அவ்வளவே!
உதட்டில் மட்டுமே தமிழ்; உள்ளத்தின் ஆழத்தில் = ??? எள்ளலே!:(

இவங்களை விட்டுருவோம்; மற்றபடி...
தமிழுக்கு "மனதார நல்லது நினைப்போர்"
 = யாராயினும்.. பிராமணர்கள் உட்பட.. அனைவரும் தமிழர்களே!

தமிழ் = பிறப்பால் வருவது அன்று!
உ.வே. சாமிநாத ஐயர் என்றொரு தமிழ்த் தாத்தா; அவர் திருவடிகள் என்றும் எனக்குத் துணை!
Enough of this digression (or) Introduction.. Let's go & see வ.உ.சி-யின் தமிழ்ப் பஞ்சாயத்து:)



எட்டுக்கால் பூச்சிக்கு = எத்தினி கால்?
மாற்றிக் கேக்குறேன்; "Spider Man"-க்கு எத்தனை கால்?:)
அதே போல்... 18 கீழ்க்கணக்கு = மொத்தம் எத்தனை நூல்கள்?:)

திருக்குறளே மிக்க பரவல் (பிரபலம்)
ஆனால் 18 கீழ்க் கணக்கில் = 18 நூல்கள்!
ஆனா, ஒரே ஒரு நூலில் மட்டும் = "பஞ்சாயத்து"

அந்த 18ஆம் நூல் எதுய்யா? = இன்னிலையா? கைந்நிலையா?
வ.உ.சி vs. அனந்த ராம ஐய்யர்

தமிழில், "தனிப்பாடல்கள்" -ன்னு ஒரு வகை இருக்கு!
அந்த வெண்பா  யாரு எழுதுனது-ங்கிற வெவரமெல்லாம் இருக்காது; திடீர்-ன்னு தோன்றி உலாத்தும்!
வெறும் சுவையே அன்றி, அவை நம்பத் தகுந்த ஆதாரம் அல்ல!

எட்டுத் தொகை நூல்கள் என்னென்ன? ஒரு "வெண்பா" இருக்கு
"நற்றிணை நல்ல குறுந்தொகை" -ன்னு தொடங்கும்;
* அந்த நூல்கள் பலருக்கும் தெரியும்; தனிப்பாடல் is just a memory tip;

அதே போல், 18 கீழ்க் கணக்கு நூலுக்கும் ஒரு தனிப்பாடல்!
= ஆனா, அதுல தான் பிரச்சனையே!:) வெண்பாவைப் பாருங்க..

நாலடி, நான்மணி, நா நாற்பது, ஐந்திணை, முப் 
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், 
இன்னிலையகாஞ்சியோடு,ஏலாதி என்பவே, 
கைந்நிலையவாம்கீழ்க் கணக்கு

எவன் எழுதித் தொலைச்ச வெண்பாவோ? கணக்கு இடிக்குது:) List போடுங்க பார்ப்போம்!

நாலடியார், நான்மணிக்கடிகை 2   
நா நாற்பது: (இன்னா, இனியவை, கார், களவழி) 4
ஐந் திணை: ஐந்திணை 50, திணைமொழி 50, ஐந்திணை 70, திணைமாலை 150 4
முப்பால் (திருக்குறள்) 1
திரிகடுகம், ஆசாரக் கோவை 2
பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம் 2
முதுமொழிக் காஞ்சி, ஏலாதி 2
17

Already 17 taken; What is the 18th?
= ஆனா, வெண்பா-வில் இன்னும் ரெண்டு Balance இருக்கு!:)
இன்னிலைய  -ன்னும் இருக்கு;
கைந்நிலைய -ன்னும் இருக்கு;

ஆனா, கூட்டினா = 18 வரணுமே! 17 + 2 = 18 ???

எந்தப் பொலவன்-யா Basic Mathematics தெரியாம, "வெண்பா" பாடி, உயிரை வாங்குறான்?:)
சங்கம் மருவிய காலம்; அந்த 18ஆம் நூல் எது? = இன்னிலையா? கைந்நிலையா??

அதாம்பா இது -ன்னு வாழைப்பழத் தீர்ப்பு சொல்ல முடியாது:) ரெண்டும் வெவ்வேறு நூல்கள்!
* வ.உ.சிதம்பரம் பிள்ளை சொல்வது = இன்னிலை;
* இ.வை. அனந்தராம ஐய்யர் சொல்வது = கைந்நிலை;



தமிழ்த் தாத்தா  உ.வே.சா ஓலை திரட்டினாரு -ன்னு பலரும் பேசிப் பேசி, அதுவே நிலைத்து விட்டது;
ஆனா அவரைப் போலவே, அவருக்கும் முன்பே...
ஈழத் தமிழர் சி.வை. தாமோதரம் பிள்ளை = கேள்விப்பட்டு இருக்கீயளா?

* உ.வே.சா இலக்கியம் திரட்டினாரு-ன்னா,
* சி.வை.தா இலக்கணம் திரட்டினாரு;

தொல்காப்பியம் முழுசும் திரட்டினாரு;
இன்றுள்ள பல இலக்கண நூல்கள், உரை நூல்கள் (சேனாவரையர்/ நச்சினார்க்கினியர்), கலித்தொகை, சூளாமணி -ன்னு...
சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பித்தவர் = சி.வை.தா

இவரும் தமிழ்த் தாத்தா தான்!
ஆனா பொது மக்களுக்குத் தெரியாது; ஏன்-னா பரப்புரை இல்லை:(

அதற்காக உ.வே.சா-வை நான் குறைத்து மதிப்பிடுவதாக கும்மி அடிக்க வேண்டாம்:)
என்றும் அவர் = நம் தமிழ்த் தாத்தா!
சொல்ல வரும் கருத்து: ஒன்றை மட்டுமே பரக்கப் பேசினால் வரும் நிலை:(

Oops.. என்ன சொல்ல வந்தேன்-ன்னா.. உ.வே.சா / சி.வை.தா அளவுக்கு இல்லீன்னாலும்...
நம்ம வ.உ.சி யும் ஓலை திரட்டி இருக்காரு; தெரியுமா??

* ஆனா, வெளியே போய், அதிகம் திரட்ட முடியலை = சிறை வாசம்;
* செக்கிழுத்து வெளி வந்த பின்போ = நோய் வாசம்!

18 கீழ்க் கணக்கு: வ.உ.சி காட்டிய ஓலைச் சுவடிகள் = இன்னிலை!
ஆனால்.... ஆனால்....

இ. வை. அனந்தராம ஐய்யர் = ஒரு தமிழ்ப் பேராசியர்! 
நட்பு வட்டச் செல்வாக்கு மிக்கவர்;

இவரும், சில சுவடிகள் வச்சிருக்காரு; மொத்தம் 45 பாட்டு; அதிலே கூட 18 பாட்டு = பாதி தான் தெரிவன!
ஆங்காங்கு சொற்களே இல்லை; சம்ஸ்கிருதச் சொற்களும் அதிகம் என்பதும் மறைக்காது சொல்லியாகணும்!

இவரைச், சேது சமஸ்தான வித்வான், உ.வே. இராகவ ஐயங்கார் அவர்களும் பலமாக வழிமொழிகிறார்;
அம்புட்டு தான்...........
எல்லாப் பண்டிதர்களும் இந்தப் பக்கமே திரண்டு விட்டனர்; வ.உ.சி அம்போ!!
= Power of "Networking", even in Tamizh:(

உ.வே. இராகவ ஐயங்கார் = பெரும் அறிஞர் என்பதையும் மறைக்காது சொல்லி ஆகணும்! கம்பனில் குளித்தவர்;
"வடமொழிக் காளிதாசனை"த் தமிழுக்குள் கொண்டு வந்தவர் = "அபிஞான சாகுந்தலம்";

* ஒரு புறம் =  சிறை விட்டு வெளியே வந்து.. நொடிந்து போன வ.உ.சி
* மறு புறம் =  சமஸ்தான வித்வான்கள் & தமிழ்ப் பண்டிதர் குழாம்

ஐய்யய்யோ, இப்படிப் பத்திக்கிச்சே; உம்ம்ம்... யாரு சொல்வது சரி?

வேண்டாம், தனி மனிதப் போக்கை விட்டுருவோம்...
* "யாரு?"-ன்னு கேள்வி வேணாம்!
* "எது?" -ங்கிற கேள்வி கேட்போம்! => எது 18 கீழ்க் கணக்கு??


இரண்டு பக்கமும், ஒரேயொரு தெளிவு மட்டுமில்லை!

தனிப்பட்ட சுவடி எல்லாஞ் சரி தான்; ஆனா..
18 கீழ்க் கணக்கிலே, அந்தச் சுவடி சேர்த்தி என்பதற்கான ஆதாரம்? = யாருக்குமே கிடைக்கலை;

வ.உ.சி  மட்டும் அரும்பாடுபட்டு, gave an "indirect" proof
= தொல்காப்பிய நூற்பா 113;
= அதற்கு, ஓலைச் சுவடியின் 5ஆம் செய்யுளை, மேற்கோள் காட்டியுள்ளார் பண்டைய உரையாசிரியர்;

யாப்பருங்கல விருத்தி உரையிலும், இன்னிலை 2ஆம் செய்யுள், மேற்கோள் காட்டப்பட்டு இருக்கு;
ஆனால்,  தரவு இருந்தும்... அன்றைய செல்வாக்கு???

** பதிப்பகம்/ தமிழ் வித்வான்கள் = வ.உ.சி யை  ஒப்புக் கொள்ளாது, அனந்த ராம ஐய்யர் பக்கமே "அணி" திரண்டனர்!
** இ. வை. ஐய்யர் தரவே தரலீன்னாலும்... வடசொற்கள் மிகுந்த ஏடு = கைந்நிலை: 18 கீழ்க் கணக்கு நூல் ஆனது! Today, It is Official;

வ. உ. சி = விடுதலையான பின், வரவேற்க யாருமில்லை!
(காங்கிரஸ் கட்சியே, அவரைக் கைவிட்டு விட்டது என்பது தனிக் கதை)

எனினும், தம் சொந்தச் செலவில், கொஞ்சம் கொஞ்சமாய் இன்னிலை நூலைப் பதிப்பித்தார்;
வறுமை/ வெறுமை! = அதிகம் முடியலை!:(

VOC didn't have a "social networking" in the field of Tamizh;
His approach is more Frankness & Justice, rather than "self seek"
voc great
வ.உ.சி
சிறைக்கு முன்னிருந்த
கம்பீரம்
வ.உ.சி
சிறைக்குப் பின்
தனிமை/ வெறுமை

ஆனா... இத்தோடு விட்டால் தான் பரவாயில்லையே!
வ.உ.சி  குடுத்த "தரவுகள்" = உறுத்திக் கொண்டே இருக்கு போலும், பண்டிதர்களுக்கு!:)

--- வ.உ.சி -க்கு ஏடு குடுத்தவர் = திருமேனி இரத்தினக் கவிராயர்;
இவரு "பழைய நடையில்" தாமே கற்பனையாப் பாட்டெழுதி, அதைத் தான் "இன்னிலை" -ன்னு புகுத்தி விட்டார்---
Ha Ha Ha; எப்படி இருக்கு கதை? "அசுரன்" ஆக்கீட்டோம்-ல்ல? டொன் டொன் டொய்ய்ங்...

இ.வை. ஐய்யர் காட்டியதில், சிதைஞ்சி போன பாட்டு = 18 இருக்கு;
கார்ப் பாம்புக் குப்பங் கி... க் கொண்......கரும் 
என்னா புரியுதா?:) ஆனா, இதையெல்லாம் எவருமே கேள்வி கேட்கலை;

"Official  தமிழ்ப் பண்டிதர்கள்", ஒன்று கூடி உரைத்த வாசகம்:
மற்ற 17 கீழ்க் கணக்கு நூல்களின் நடை = வ.உ.சி காட்டிய இன்னிலையில் இல்லை = எனவே, இது பொய்யான புகுத்தல்!

திருக்குறளின் நடை, பழமொழி நானூறில் இல்லீயே; அது மட்டும் எப்படி 18 கீழ்க் கணக்கு?
= Ha ha ha!  விடுய்யா, விடுய்யா..
= Twitter/ Blog-ல கேக்குறதெல்லாம் "சபை" ஏறுமா? ஒம்ம கிட்ட Official Network இருக்கா?:)
------------------------

சொந்தக் காசையெல்லாம், தேச பக்தியில் தொலைச்சிட்டு, மாடு போல் செக்கிழுத்து...
இன்னிக்கி தனி மரமாய் நிக்கும் வ.உ.சி = "பொய்" சொல்லிட்டாரு-ன்னே வச்சிப்போம்............

* ஆனா, "இன்னிலை" -ன்னும் அந்த வெண்பாவில் இருக்கேப்பா? = ஓய், அதெல்லாம் கேக்காதீங் காணும்;
* சரிப்பா, இன்னிலை வேணாம்! ஆனா வடசொல் மிகுந்த "கைந்நிலை", 18 நூலில் ஒன்னு என்பதற்கு தரவு? = என்ன ஸ்வாமி, தரவெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீரு?:)

அதான் இன்னிலை அல்ல-ன்னு... "குழுவாச் சேர்ந்து" சொல்லீட்டோமே!
So, 18ஆம் நூல் = கைந்நிலையே! <சுபம்>


முருகா,
* செக்கை மாடு போல் இழுத்த செல்வந்தன் = அவனா பொய்யாப் பாட்டெழுதிப் புகுத்துவான்?
* British Government -உடன் சமரசம் செய்து கொண்டே விடுதலைப் போர் செய்யத் தெரியாதவன்;
* இடைக்கால British அரசில் முதலமைச்சர் "வ.உ.சி-ஜி" ஆகாதவன் = அவனா பொய்ப் பாட்டு புகுத்துவான்?

அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
voc last
வ.உ.சி - இறுதி யாத்திரை

ஆனாலும்...
தன்னைக் கைவிட்ட தமிழை = வ.உ.சி  கைவிடவில்லை!
அவர் இறுதிக் காலத் "தனிமை"யில் = ஒரே ஆறுதல், தமிழ்!

*தொல்காப்பியத்துக்கு உரை எழுதினார்;
*சிவ ஞான போதம் என்ற நூலுக்குச், சமயம் கடந்து, "அன்பே சிவம்" என்று முன்னிறுத்தி, புது உரை செய்து கொடுத்தார்;
இந்தக் கையெழுத்துப் பிரதிகள் எல்லாம்... இன்று காணாமலேயே போய்விட்டன:(

ஏதோ... நடிகர் திலகம் சிவாஜி... நடித்து (உயிர்த்துக்) குடுக்க... "கப்பலோட்டிய தமிழன்" என்ற நினைவாச்சும் தங்கியிருக்கு!
சினிமா மட்டும் இல்லீன்னா.. வ.உ.சி = இன்னிக்கி யாரோ!:(



* "அ முதல் ஹ" வரை 48 சம்ஸ்கிருத எழுத்தே = 48 சங்கப் புலவர்களா பிறவி எடுத்துச்சி;
49-வதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு -ன்னு  "திருவிளையாடற் புராணம்" எழுதிய "தமிழ்க்" குழு அல்லவா?

* தமிழ்த் தொன்ம முருகனை -> புராணக் கதைகள் ஏற்றி ஏற்றி..
சுப்ரமணியன் ஆக்கிய "தமிழ்ப்" பண்டிதர்கள் அல்லவா!

= இந்தக் "குழு அரசியல்"-ல்லாம் கடந்து வந்து தான்...
= இன்னிக்கும் நிக்குது தமிழ்!!!

சொற்பமான அறிஞர்கள், இன்றும், "இன்னிலை - கைந்நிலை", இரு நூல்களையும் ஒருங்கே வைத்துத் தான், படிக்கின்றனர்; ஆனால்....
* "Officially", கைந்நிலையே = 18 கீழ்க் கணக்கு!
* (இன்னிலை அல்ல என்று ஆக்கப்பட்டு விட்டது) 

அதனால் என்ன? = இன்னிலையும் தமிழ்த் தாய்க்கு அணிகலனே!

* தான் ஒடுங்கிப் போன நிலையிலும்...
* தமிழ் ஒடுங்கிப் போகாமல்,
தமிழுக்கு "இன்-நிலை" தேடித் தந்தவனே!

தூத்துக்குடி தந்த தூயோனே; வ.உ.சி = உன் "தோல்வித்-தமிழ்" வாழ்க!!



Viewing all articles
Browse latest Browse all 53

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!